உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மர் கோயில் புற்றுமண்!

நரசிம்மர் கோயில் புற்றுமண்!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. நரசிம்மர் இங்கு சுயம்புவாகக் காட்சியளிக்கிறார். கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்றுமண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். அதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணைப் பூசினால், தோல் நோய் குணமாகும் என்று நம்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !