உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்

காமாட்சியம்மன் - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த, 8ம் தேதி தெய்வகுளம் காளியம்மன் கோவில், விநாயகர் கோவில்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், சக்தி கும்ப ஸ்தாபனம் நடைபெற்றது. அடுத்து 9ம் தேதி மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.  நேற்று காலை 6:00 மணிக்கு முத்தங்கி அலங்கார பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடர்ந்து 11:00 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 6:00 மணிக்கு மேல் அம்மன் திருவீதியுலாவும், இரவு 8:00 மணிக்கு அம்மன் திருஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.  கோட்டூர் ரோடு வண்ணக்கண் மில்லை அடுத்த விண்ணளந்த காமாட்சியம்மன் கோவிலில், கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் சித்ரா பவுர்ணமி விழா துவங்கியது. அடுத்து 9ம்தேதி கணபதி ேஹாமம், திருமூர்த்தி மலை தீர்த்தம் கொண்டு வருதல், கும்ப ஸ்தாபனம் செய்தல் நடைபெற்றது.  நேற்று காலை 8:00 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், 12:00 மணியளவில் ஏகாம்பரேஸ்வரர் விண்ணளந்த காமாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.  மாலை 5:00 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இவ்விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !