உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாச்சூர் கோவிலில் மந்திர யாகம்

திருப்பாச்சூர் கோவிலில் மந்திர யாகம்

திருப்பாச்சூர் : புதிய திருப்பாச்சூரில் உள்ள காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகை கோவிலில், சித்ரா பவுர்ணமி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 1,008 தாமரைகளால் மகாலட்சுமி சூக்த மூல மந்திர யாகம் நடந்தது. திருவள்ளூரை அடுத்த, புதிய திருப்பாச்சூரில் உள்ளது காமேஸ்வரர் சமேத லலிதா மகா திரிபுரசுந்தரி கோவில். இங்கு, வசந்த நவராத்திரி உற்சவமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், காலை 10:30 மணிக்கு, லலிதா சகஸ்ரநாமமும், நடந்து வருகிறது. இக்கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஐந்தாவது ஆண்டாக, நேற்று, காலை, 9:30 மணி முதல், 12:00 மணி வரை, 1,008 தாமரைகளால், 64 வகை விசேஷ மூலிகைகளால், மகாலட்சுமி சூக்த மூல மந்திர யாகம் நடந்தது. முன்னதாக, காலை, 8:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், காலை, 8:30 மணிக்கு, கலச ஸ்தாபனமும் நடந்தது. பின், மாலை, 6:30 மணிக்கு, குபேர பூஜையும், 1,008 லட்டுகளால், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !