உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

துர்க்கையம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

திருத்தணி : துர்க்கையம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நேற்று நடந்தது. திருத்தணி, சுப்ரமணிய நகரில் உள்ள கருமாரியம்மன் மற்றும் துர்க்கையம்மன் ஆகிய கோவில்களில், சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து, பம்பை வாத்தியங்களுடன், 108 பெண்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக துர்கையம்மன் கோவில் வளாகத்தை அடைந்தனர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !