இறையானூர் சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி தீமிதி விழா
திண்டிவனம்: இறையானுார் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 63ம் ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தீமிதி திருவிழா நடந்தது. திண்டிவனம் அடுத்த இறையானுார் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 63ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. தினந்தோறும் முருகன் பூஜை, அருணாசல பூஜை, மகாலட்சுமி பூஜை, அய்யப்ப சுவாமி பூஜை, சரஸ்வதி பூஜைகள் நடந்தன. கடந்த 8ம் தேதி முத்துபல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 9ம் தேதி இந்திர விமானத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று நடந்த தீமிதி மற்றும் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆன்மீக குரு வரதராஜ அடிகளார் தலைமையில், கோவில் அர்ச்கர்கள் மகாதேவன், சிவகாளிதாஸ், திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.