உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய பகவான் கோவிலில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்

சூரிய பகவான் கோவிலில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்

குறிச்சி : மதுக்கரை அருகே, குரும்பபாளையத்திலுள்ள சூரிய பகவான் கோவிலில், சித்ரா பவுர்ணமி மற்றும் நவக்கிர மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. விழா, நேற்று முன்தினம் காலை, வினாயகர் பூஜை, புன்யாக வாசனம், வாஸ்துசாந்தி உள்ளிட்டவையுடன் துவங்கியது. மதியம் நவக்கிரக விக்கிரகங்களுக்கு பிம்பசுத்தி திருமஞ்சனம் பூசுதல் நடந்தது. மாலை முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து திருவிளக்கு பூஜை, முதல் கால பூர்ணாஹுதி, தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் நடந்தன. தொடர்ந்து, சக்தி கரகம் எடுத்தலும், நவக்கிரக மூர்த்திகளுக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருத்து சாத்துதலும் நடந்தன. நேற்று அதிகாலை, போளை மூடி எடுத்தல், அபிஷேகம் தயாரித்தல், இரண்டாம் கால யாக பூஜை, பொங்கல் வைத்தல், கலச புறப்பாடு, நவக்கிரக மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், சூரிய பகவானுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடந்தன. மதியம் உச்சி கால பூஜை, அன்னதானமும் நடந்தன. மாலை மறுபூஜை, கோதுமை பள்ளயம் வைத்தலுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !