உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண சிறப்பு பூஜை

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண சிறப்பு பூஜை

திருப்பூர் : சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை நடைபெற்றது. திருப்பூர் ராயபுரம் ராஜவிநாயகர், ருக்மணி சமேத பாண்டுரங்கன் கோவிலில், 14 ம் ஆண்டு, சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சத்தியநாராயண பூஜையும், மதியம் அபிஷேக, அலங்கார பூஜையும், அதனை தொடர்ந்து திருக்கல்யாணமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !