உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரபுரநாதர் கோவிலில் சிவசிவ கோஷத்துடன் பவுர்ணமி தேரோட்டம்

கரபுரநாதர் கோவிலில் சிவசிவ கோஷத்துடன் பவுர்ணமி தேரோட்டம்

உத்தமசோழபுரம்: கரபுரநாதர் கோவிலில், சிவசிவ கோஷம் முழங்க, ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சித்திரை தேரோட்ட விழா முகூர்த்தகால் நடுதல், கடந்த, 24ல் நடந்தது. அதற்கான கொடியேற்றம், கடந்த, 8ல் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் சித்ரா பவுர்ணமி விழாவில், நேற்று மாலை, 5:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பெரியநாயகி கரபுரநாதர், சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகர், முருகன் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். பெரிய தேரை, வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோண்மணி வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் சிவசிவ கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்தனர். இன்று, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 12 மாலை ஊஞ்சல் உற்சவம், 13ல், மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் விழா நிறைவடையும்.

* பனமரத்துப்பட்டி பிரிவு, ஈசன் நகர், ஆதிபராசக்தி கோவிலில், பவுர்ணமி பூஜை, நேற்று நடந்தது. அதில், சேலம், பனமரத்துப்பட்டி, சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்து, ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து, கோவிலுக்கு வந்தனர். மதியம், 1,008 லிட்டர் பாலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள், 51 முறை கோவிலை வலம் வந்து, பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அதேபோல், வாழப்பாடி, நாகசக்தி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !