ஸ்ரீபுரம் தங்க கோவிலில் 1,008 நெய் விளக்கு பூஜை
ADDED :3118 days ago
வேலூர்: ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு, 1,008 நெய் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை நடந்தது. உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று முன் தினம் இரவு, 8:00 மணிக்கு, 1,008 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து, சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையை, சக்தி அம்மா துவக்கி வைத்தார். தங்க கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.