வெண்ணீர்வாய்க்கால் கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :3118 days ago
முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலில் கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் கோயில்களில் ஆறு கால யாக பூஜைகள், கோமாதா, அனுக்ஞை பூஜைகளுடன் துவங்கிய கும்பாபிஷேகம், கருட வாகனத்திற்கு பின் கும்பங்களில் கலச நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்கள் பொங்கல் வைத்து, அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியில் முதுகுளத்துார் எம்.எல்.ஏ., பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.