திருவனந்தீஸ்வரமுடையார் கோயிலில் ருத்ராபிஷேகம்
ADDED :3118 days ago
சிக்கல், சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் சிவகாமி சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ருத்ராபிஷேகம் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவநாம அர்ச்சனை, சகஸ்ரநாம பூஜைகள் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை மாதாந்திர பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.