கருப்பண சுவாமி கோயிலில் பூக்குழி விழா
ADDED :3118 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்ணாரேந்தல் கருப்பண சுவாமி கோயிலில் சித்திரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு விரதமிருந்த பக்தர்கள் கிழக்கு கடற்கரை முள்ளிமுனை கடலில் புனித நீராடி அங்கிருந்து பால்குடம், காவடி, வேல் உள்ளிட்டவைகளுடன் ஊர்வலமாக வந்து கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழாவில் கண்ணாரேந்தல், ஏ.மணக்குடி, வெட்டுக்குளம், அழியாதான்மொழி, பேரவயல் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.