கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா: வேலூர் மாவட்டத்துக்கு 15ல் விடுமுறை
ADDED :3073 days ago
வேலூர்: கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவையொட்டி, வரும், 15ல், வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா, வரும், 15ல் நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதையொட்டி, வரும், 15ல் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில், அன்றைய தினம், வேலூர் மாவட்டத்திற்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஜூன், 10 சனிக்கிழமை, அரசு அலுவலகங்களில் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.