திண்டிவனம் கோவிலில் 1008 பால் குட ஊர்வலம்
ADDED :3185 days ago
திண்டிவனம் : திண்டிவனம் பெரிய முத்துமாரியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 1008 பால் குட ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் எம்.ஆர்.எஸ். ரயில்வேகேட் அருகில் பெரிய முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, ராஜாங்குளம் சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு 1008 பால்குடம் மற்றும் 108 தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலையில் தீமிதி திருவிழாவும், சந்தன காப்பு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.