பலபட்டறை மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.2.5 லட்சம் காணிக்கை
ADDED :3068 days ago
நாமக்கல்: நாமக்கல், பலபட்டறை மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன், ஆய்வாளர் செல்வி, இ.ஓ., சுதாகர் முன்னிலையில் திறக்கப்பட்ட உண்டியல், தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. அதில், இரண்டு லட்சத்து, 52 ஆயிரத்து, 518 ரூபாய் மற்றும் 22 கிராம் தங்கம், 37 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.