கோதண்டராமர் கோவிலில் நாளை பட்டாபிஷேக விழா
ADDED :3068 days ago
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமர் கோவிலில், நாளை, திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம் மகோத்சவ விழா நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு கோமாதா பூஜை, பால்குட ஊர்வலத்துடன், விழா தொடங்குகிறது. 7:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை, 9:00 மணிக்கு மாப்பிள்ளை, பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு, 9:30 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவம், பட்டாபி?ஷகம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.