உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 200 ஆண்டுகள் பழமையான 2 அம்மன் சிலைகள் மீட்பு

200 ஆண்டுகள் பழமையான 2 அம்மன் சிலைகள் மீட்பு

வேலூர்: கால்வாயில் இருந்து, 200 ஆண்டுகள் பழமையான, இரண்டு அம்மன் சிலைகள் மீட்கப்பட்டன. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை கிராமத்தில், சண்முகம், கோபால் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், கால்வாய் தூர் வாரும் பணி நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. அப்போது, கால்வாயில் இரண்டு அம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அம்மலூர் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சத்யா ஆகியோர், அம்மன் சிலைகளை மீட்டு, வாணியம்பாடி தாசில்தார் முரளிகுமாரிடம் ஒப்படைத்தனர். வருவாய்த்துறையினர் நடத்திய சோதனையில், அம்மன் சிலைகள், 200 ஆண்டுகள் பழமையானது என, தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !