உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்கோவிலில் மழை வேண்டி சிறப்பு வருண பூஜை

சிவன்கோவிலில் மழை வேண்டி சிறப்பு வருண பூஜை

தியாகதுருகம்: குடியநல்லுாரில் சிவன் கோவிலில் மழை வேண்டி வருணபூஜை நடந்தது. தியாகதுருகம் அடுத்த குடியநல்லுார் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் சிவன் கோவிலில் நேற்று காலை மழை வேண்டி வருணபூஜை நடந்தது. மூலவர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் வருணபகவானுக்கு மழைவேண்டி விசேஷ பூஜைகள் நடந்தது.யாகசாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடத்தப்பட்டது. மகாதீபாராதனையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மழை வேண்டி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !