உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன வின்ச் அமைக்கத் திட்டம்

பழநி கோயிலில் ரூ.150 கோடியில் நவீன வின்ச் அமைக்கத் திட்டம்

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு ஒன்றரை நிமிடத்தில் செல்ல, ரூ.150கோடியில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் புதிய வின்ச் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லவும், அதேநேரத்தில் கீழே வரவும் ரோப்கார் இயங்குகிறது. 8 நிமிடத்தில் மலைக்கு செல்லவும், அதேநேரத்தில் கீழேவரும் வகையில் மூன்று வின்ச்-கள்(மின்இழுவை ரயில்கள்) இயக்கப்படுகின்றன. பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 2 மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை காத்திருந்து சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் எலக்ட்ரிக் ரயில்போல வேகமாகசெல்லும் வின்ச் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.150 கோடி செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில்அதிகாரி ஒருவர் கூறுகையில், “நவீன வின்ச் மாதிரிகள் வடிவமைக்கப்படஉள்ளது. தற்போது ஒருவின்ச்-சில் 32பேர் பயணம்செய்ய லாம், புதிய வின்ச்சில் 75பேர் வரை, ஒன்றரை நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லமுடியும். இதற்காக ஜெர்மன் நாட்டு தொழிநுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம் அவர்கள் ஓரிரு மாதங்களில் வரஉள்ளனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !