வெயில் பாதிப்பை தவிர்க்க கஸ்துாரிக்கு கவனிப்பு
ADDED :3267 days ago
பழநி: பழநி கோயில் யானை கஸ்துாரி கோடை வெப்பத்தால் அவதிப்படுவதால், தினமும் 3 முறை,ஷவர் குளியல் நடத்துகிறது. பழநி முருகன்கோயில் யானை கஸ்துாரி, எட்டு வயது முதல் பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதயேக கூடாரத்தில் பராமரிக்கப்படுகிறது. தற்போது 49 வயதாகும் கஸ்துாரி அக்னி நட்சத்திர வெயிலால் சிரமப்படுகிறது. எனவே வெப்ப நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க கால்நடை மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி, தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளையில், கஸ்துாரியை ஷவர் மற்றும் தொட்டியில் குளிக்க வைக்கின்றனர். காரமடை தோட்டத்தில் இயற்கை சூழலில் மோட்டாரில் குளித்து ஓய்வுஎடுக்கிறது. இதனால் கஸ்துாரி புத்துணர்வுடன் உள்ளதாக தெரிவித்தனர்.