எல்லாம் அவன் விருப்பம்
ADDED :3106 days ago
என் மகளுக்கு நிக்காஹ் செய்ய முடிவு செய்துள்ளேன். அடுத்த மாதம் உங்களைச் சந்திப்பேன். உங்களால் எனக்குப் பண உதவி செய்ய முடியுமா? என்று ஒருவர் உங்களிடம் உதவி கேட்டால், நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று பதில் சொல்லுங்கள். இந்தச் சொல்லுக்கு அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம். ஆம்... இறைவனின் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது. உதவி கேட்பவரும், உதவி செய்பவரும் அதுவரையில் உயிருடன் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும், இன்று செல்வச் செழிப்புடன் இருக்கும் உதவியாளர், நாளையே செல்வத்தை இழக்கலாம். ஆக, எது நடந்தாலும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது. எனவே, இறைவனின் விருப்பப்படி ஆகட்டும் என்று சொல்லுங்கள். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று அவனையே வேண்டுங்கள்.