குன்னுார் கருமாரியம்மன் கோவில் 112வது ஆண்டு கரக உற்சவம்
ADDED :3095 days ago
குன்னுார் : குன்னுார் சின்ன வண்டிச் சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில், 112வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது. குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 112வது ஆண்டு கரக உற்சவ விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கொடியேற்றம், முகூர்த்த வளையல் அணிவித்தல், அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல், கங்கைக்கு புறப்படுதல், திருக்கரக ஜோடனை உற்சவம், ஆகியவை நடந்தன. இதில், கன்னி பெண்கள், சிறுமியர் மஞ்சள் பூசியபடி விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கு நடந்த சாட்டையடி நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. கொட்டும் மழையில் கரக ஊர்வலம் நடந்தது. இன்று அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராடல், மறுபூஜை, விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.