பழநியில் குவிந்த பக்தர்கள்: தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்திருப்பு
ADDED :3151 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கோடைவிடுமுறையால் பழநி முருகன் மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு, சுபமுகூர்த்த தினங்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும். நேற்று குவிந்த பக்தர்கள் காவடி, பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துநேர்த்திக்கடன் செலுத்தினர். வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசன வழியில் நான்கு மணிநேரம் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.