கந்தநாதன், தண்டாயுதபாணி கோயில் மண்டலாபிஷேக விழா
ADDED :3101 days ago
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் தங்கவிநாயகர், கந்தநாதன், தண்டாயுதபாணி கோயில் மண்டலாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். டாக்டர் சுவாமிநாதன், டி.சுப்புலாபுரம் வர்த்தக பிரமுகர்கள் அழகர்சாமி, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.