ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அமைச்சருக்காக காத்திருந்த வருண பூஜை
ADDED :3164 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி வருண பூஜை நடந்தது. அமைச்சர் மணிகண்டன் தலைமையில் காலை 9:00 மணிக்கு துவங்கி 10:00 மணிக்கு நிறைவடையும், என அறிவிக்கப்பட்டது.அதன்படி குறித்த நேரத்தில் பூஜை துவங்கி நிறைவு பெற்றது. இருந்தாலும் அமைச்சர் வராததால் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தை எடுத்து நந்திக்கு அபிஷேகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.பூஜை நடத்திய பண்டிதர்கள், கோயில் நிர்வாகிகள் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். 11:15 மணிக்கு அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அதன் பிறகே நந்திக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.இது ஆகம விதிகளுக்கு முரணானது என வேத விற்பன்னர்கள் தெரிவித்தனர்.