உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை செவ்வாயில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஊத்துக்கோட்டை செவ்வாயில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஊத்துக்கோட்டை : வைகாசி மாதம், கத்தரி நாள், செவ்வாய்க்கிழமையான நேற்று, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

வைகாசி மாதம், கத்திரி வெயிலில், கிராமங்களில் உள்ள அம்மனுக்கு ஜாத்திரை விழா, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று, ஊத்துக்கோட்டை, பூந்தோப்பு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, கத்திரி
நாளை ஒட்டி, சிறப்பு பூஜை நடந்தது.

பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா
தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !