உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டையில் பிரம்மோற்சவம் துவக்கம்

ஆர்.கே.பேட்டையில் பிரம்மோற்சவம் துவக்கம்

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 29ல், தேர் திருவிழா நடைபெற உள்ளது.
ஆர்.கே.பேட்டை சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆண்டு பிரம்மோற்சவம், இன்று, காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, நேற்று, மாலை 6:00 மணிக்கு, அங்குரார்ப்பணம் நடந்தது.இன்று மாலை, சேஷ வாகனத்தில் சுவாமி உலா வருகிறார். 30ம் தேதி, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !