ஏகனாம்பேட்டை கோவில் சுவரில் கடவுள் படங்கள் போஸ்டர்
ADDED :3101 days ago
ஏகனாம்பேட்டை : கோவில் மதில் சுவரில், கட்சி போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்ப்பதற்கு, கோவில் நிர்வாகத்தினர், சுவாமி படங்களை ஒட்டி தடுப்புஏற்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் -வாலாஜாபாத் செல்லும் சாலையில், ஏகனாம்பேட்டை கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மதில் சுவரில், பல கட்சி நிர்வாகிகள் மற்றும் இறந்தவர்களின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்
ஒட்டப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த செயல், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அச்செயலை தவிர்க்கும் பொருட்டு, கோவில் நிர்வாகத்தினர், கோவில் மற்றும் சுவாமி உற்சவ
படங்களை அச்சடித்து, அங்கே ஒட்டியுள்ளனர். அதில், சுவரின் மீது போஸ்டர் ஒட்டி பாவங்களை தேடாதீர்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.