மூக்கரகாளியம்மனுக்கு நாளை கும்பாபிஷேகம்
ADDED :3093 days ago
சேலம்: மூக்கரகாளியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. சேலம், அம்மாபேட்டை அடுத்த வீராணம், மூக்கரகாளியம்மன் கோவில் கட்டுமானப் பணி, சமீபத்தில் முடிந்தது. தற்போது, ஊர்பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று கோபுர கலசத்துக்கு அபிஷேகம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 9:15 மணிக்கு, மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.