மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
குளித்தலை: கட்டாரிப்பட்டி, வலையப்பட்டி மாரியம்மன் கோவில்களில், திருவிழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, பாப்பாக்கப்பட்டி பஞ்சாயத்து, கட்டாரிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பால்குடம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கோவிலில் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, இரவு கரகம் பாலித்து, அம்பாள் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கிறது. அதேபோல், இரணியமங்கலம் பஞ்சாயத்து, வலையப்பட்டி மேல காலனி பொது மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரிஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு கரகம் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.