திருநள்ளார் பிரமோற்சவ விழா: புஷ்பபல்லாக்கில் சுவாமி வீதியுலா
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி புஷ்பபல்லாக்கு வீதியுலா நடந்தது. காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவலில்,சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 18ம் தேதி விக்னேஸ்வர பூஜை,மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது.பின் பஞ்சமர்த்தி வீதி உலா நடந்தது. கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விநாயகர் உற்சவமும்,கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும், நேற்று இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும்,வரும்2ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும்.4ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.5ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னிர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.