நசியனூர் வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3095 days ago
ஈரோடு: ஈரோடு அருகே, நசியனூர் முள்ளம்பட்டியில், பழமையான வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. கோபுரம், சிலாதிருமேனி அமைக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதன் பின், விநாயகர், கன்னிமார்சாமி, மூலவர் வீரமாத்தியம்மன். உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் ஈரோடு, நசியனூர், பொருந்துறை, அந்தியூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பவானி, லட்சுமி நகர், மேட்டுநாசுவம்பாளையம், விவேகானந்தர் வீதியில் உள்ள, சக்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று, வெகு விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.