உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாட்டசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நாட்டசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் விழா நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (மே 31) முதல் ஜூன் 4 வரை தினமும் இரவு சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 5 இரவு கோயில் உள்வீதியில் தங்கரத புறப்பாடும், வெளிவீதியில் அன்னவாகனம் புறப்பாடும் நடக்கிறது. ஜூன் 6 காலை அம்மன் களியாட்ட நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு வெள்ளிரத புறப்பாடும், ஜூன் 7 காலை 9:30 மணிக்கு தேரோட்டமும், இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூன் 8 இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் முயல்குத்தி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணபதிராமன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !