உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் அய்யப்பன் கோவிலில் லட்சார்ச்சனை

திருக்கழுக்குன்றம் அய்யப்பன் கோவிலில் லட்சார்ச்சனை

திருக்கழுக்குன்றம்: வீராபுரம் அய்யப்பன் கோவிலில், 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் லட்சார்ச்சனை விழா, நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வீராபுரம் கிராமத்தில், தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளானதை ஒட்டி, 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதில், நேற்று முன்தினம், படி அபிஷேகம் செய்து, இருமுடி கட்டி பக்தர்கள் வீதியுலா வந்தனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும், தீப துாப ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, லட்சார்ச்சனை விழா நடந்தது. இதற்காக, ஒரு மாதம் முன்பிருந்து, மாலை அணிந்து, பக்தர்கள் விரதம் மேற் கொண்டிருந்தனர். நேற்றுடன் விரதத்தை கலைத்து, சுவாமியை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !