உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கச்சியம்பதி விநாயகருக்கு ஜூன் 4ல் கும்பாபிஷேகம்

திருக்கச்சியம்பதி விநாயகருக்கு ஜூன் 4ல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்கச்சியம்பதி விநாயகர் கோவிலில், ஜூன், 4ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம், டி.கே.நம்பிதெருவில், அஷ்டபுஜபெருமாள் அருகில், மிகப்பெரிய அரச மரம் உள்ளது. அதன் கீழ், திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, விசேஷ நாட்கள் மற்றும் மாதந்தோறும், சங்கடஹர சதுர்த்தியன்று, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், ஜூன் 4ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில், விமானம் சீரமைப்பு மற்றும் பஞ்சவர்ணம் பூசுதல் உட்பட, பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !