உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-4: உழைப்பே உயர்வு தரும்

ரமலான் சிந்தனைகள்-4: உழைப்பே உயர்வு தரும்

ஒருசமயம், நபிகளாரிடம் வந்த ஒருவர், தனக்கு உதவுமாறு கேட்டார். நாயகம் அவரிடம், “உம்மிடம் உடமைகள் ஏதாவது உள்ளதா?” என்று கேட்டார்.“என்னிடம் தண்ணீர் கிண்ணம் ஒன்றும், படுக்கை விரிப்பும் தான் உள்ளன. வேறு எதுவுமில்லை,” என்று அவர் பதிலளித்தார். அதை இரண்டு திர்ஹமுக்கு ஒருவரிடம் விற்ற பின், அந்த மனிதரிடம்,“ இதில் ஒரு திர்ஹமுக்கு உமக்கு உணவும், இன்னொரு திர்ஹமுக்கு ஒரு துண்டுக்கயிறும் வாங்கி, காட்டுக்குச் சென்று விறகு சேகரித்து வந்து கடைத்தெருவில் விற்பனை செய்யும்,” என்று கூறி அனுப்பினார்.15 நாட்களுக்குப் பிறகு, அந்த மனிதர் நாயகத்திடம் வந்து தற்போது தம்மிடம் பதினைந்து திர்ஹம்கள் உள்ளதாகவும், அதைக்கொண்டு கோதுமை, துணிமணி வாங்கப்போவதாகவும் தெரிவித்தார். உழைப்பே உயர்வானது என்பதை இந்த நிகழ்விலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:40 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:15 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !