பழநி உண்டியல் வசூல் ரூ.3 கோடி
ADDED :3094 days ago
பழநி: கோடை விடுமுறை காரணமாக, பழநி முருகன்கோயில் உண்டியலில் 27 நாட்களில் ரூ.3கோடியே 9 லட்சம் வசூலாகியுள்ளது. பழநி முருகன்கோயிலுக்கு கோடை விடுமுறை காரணமாக வெளிநாடு, மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக உண்டியல் எண்ணிக்கை நடந்தது. நேற்று 2ம்நாள் எண்ணிக்கையில் ரொக்கம் ரூ. ஒரு கோடியே 8லட்சத்து 7ஆயிரத்து 114ம், தங்கம்-308கிராம், வெள்ளி-4,200 கிராம், வெளிநாட்டு கரன்சி-166ம் கிடைத்துள்ளது. இதன் மூலம் 3நாள் எண்ணிக்கையில் மொத்தம் ரூ.3 கோடியே 9 லட்சத்து ஒருஆயிரம் 27நாட்களில் கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.