மழைக்காக பாலாபிஷேகம் பெரியாண்டவருக்கு விமரிசை
ADDED :3093 days ago
இரும்பேடு : இரும்பேடு கிராமத்தில், மழை வேண்டி பெரியாண்டவருக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் நடத்தினர். செய்யூர் அடுத்த, இரும்பேட்டில், மரத்தடியில் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிலை வழிபாடோ, மண்டபமோ இவருக்கு ஏற்படுத்தப்படவில்லை. ஆண்டுதோறும், மே மாதம் கடைசி வாரத்தில், மழை வேண்டி, இங்கு அபிஷேகம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு, செய்யூர் வட்டாரத்தில், கடும் வறட்சி நிலவுவதால், விவசாயம் செழிக்க, ஆயிரக்கணக்கானோர் தீச்சட்டி ஏந்தி, ஆண்டவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். முக்கனிகளை படைய லிட்டு, மழைக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.