உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர், மாரியம்மன் கம்பம் ஆற்றுக்கு விடும் விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கரூர், மாரியம்மன் கம்பம் ஆற்றுக்கு விடும் விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் விழா நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, கம்பம் ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. அமராவதி ஆற்றுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கம்பம் ஊர்வலமாக சென்றது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் (பொ) சூர்யபிரகாஷ், எஸ்.பி., ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* கம்பம் ஊர்வலம் புறப்படும் முன், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் கோவிலுக்குள் இருந்தனர். அப்போது, எஸ்.பி.,யுடன் வந்த போலீசார், காலில் பூட்ஸ் அணிந்த நிலையில், மூலவரை மறைத்தபடி நின்றனர். இதனால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !