அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3089 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதவல்லியம்மன் சமேத அமுதலிங்கேஸ்வரர் கோயிலில், வைகாசியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று அமுதவல்லியம்மன் சமேத அமுதலிங்கேஸ்வரருக்கு திருக் கல்யாணம் நடந்தது. சாமிகள் கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் திருக் கல்யாணத்தை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மொத்தம் 11 நாள் நடக்கும் விழாவில், தீர்த்தவாரியுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.