விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் விழா
ADDED :3139 days ago
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் விழா மே 30ல் பொங்கல் சாட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தன. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னிசட்டி எடுத்தல் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் கயிறுகுத்து, அலகு குத்தி 21 ,51 அக்னிசட்டி , கரும்பு தொட்டில் என நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் கயிறுகுத்தி தேர் இழுத்தல் நடந்தது.