உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சுழி முருகன் கோயிலில் வைகாசி விசாகம்

திருச்சுழி முருகன் கோயிலில் வைகாசி விசாகம்

திருச்சுழி: எம். ரெட்டியபட்டி க. விலக்கு அருகில் உள்ள தும்முசன்னம்பட்டியில் செந்தில் கோட்ட முருகன் கோயில் உள்ளது. இங்கு  வைகாசி விசாகத்தை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்  விரதம் இருந்து நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம், காவடி, அலகு குத்தி, நேர்த்தி கடன் செலுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் நேற்று மாலையில் பாதயாத்திரையாக திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !