நட்சத்திர கோவிலில் இந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3081 days ago
உத்திரேமரூர்: உக்கம் பெரும்பாக்கம் நட்சத்திர கோவிலில் நேற்று, இந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. உத்திரமேரூர் வந்தவாசி சாலையில், உக்கம் பெரும்பாக்கம் அருகே, கூழ மந்தல் ஏரிக்கரையில், அசுவினி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத் தில் பூஜைகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, இக்கோவிலில், இந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷே கம் நைட பெற்றது. இதில், அப்பகுதி பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.