திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா
ADDED :3300 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நடந்தது. கோயிலில் மே 29ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விசாக திருவிழாவில் தினம் இரவு சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் நடந்தது. நேற்று பால்குட உற்சவம் நடந்தது. இன்று(ஜுன் 8) காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுõரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்தார்.