ஊத்துக்கோட்டை அம்மன் கோவில்களில் பவுர்ணமி விழா
ADDED :3058 days ago
ஊத்துக்கோட்டை: பவுர்ணமி விழாவை ஒட்டி அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். வைகாசி மாத பவுர்ணமி நாளை ஒட்டி, ஊத்துக்கோட்டையில் உள்ள செல்லியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நேற்று நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.இதேபோல், பூந்தோப்பு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், சப்த கன்னியர் கோவில், நாகலாபுரம் சாலையில்
உள்ள ஸ்ரீநாகவல்லியம்மன் கோவில், பஜார் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள நாகவல்லியம்மன் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.