உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

ஊத்துக்கோட்டை : பவுர்ணமி விழாவை ஒட்டி, சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது சாய்பாபா கோவில். இங்கு, தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் பவுர்ணமி நாட்களில் சத்தியநாராயணா பூஜை நடைபெறும். இந்நிலையில், வைகாசி மாத பவுர்ணமி நாளை ஒட்டி, நேற்று காலை, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, பக்தர்கள் கூடி பஜனை பாடப்பட்டது. அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளானோர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !