பாலமேடு மந்தையம்மன் கோயில் விழா
ADDED :3055 days ago
பாலமேடு: பாலமேடு அருகே கோணப்பட்டி மந்தையம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு கரகம் ஜோடித்து கோயில் சேர்த்து அம்மன் கண் திறக்கப்பட்டது.
தொடர்ந்து சக்தி கிடா வெட்டினர். விரதமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் உட்பட நேர்த்திக்கடன் செலுத்தினர். 3ம் நாள் இரவு ஊர் எல்லையில் உள்ள ஊரணியில்
முளைப்பாரி கரைத்தனர்.