உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராமணர் சங்கத்தின் இலவச உபநயனம்

பிராமணர் சங்கத்தின் இலவச உபநயனம்

சேலம்: இலவச உபநயனம் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சிறுவர்களுக்கான இலவச உபநயனம் நிகழ்ச்சி, நேற்று, மரவனேரியில் உள்ள சங்கர மடத்தில் நடந்தது. சங்க மாவட்ட பொது செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், 19 சிறுவர்களுக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அப்போது, தினமும் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும் என, எடுத்துரைக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !