உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. அரசு வகையில் ஆதாயம்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1).. அரசு வகையில் ஆதாயம்

தளராத மன உறுதி படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 11-ல் உள்ள செவ்வாய், சூரியனால் நன்மை அதிகரிக்கும். புதன் 11-ம் இடமான மிதுனத்தில் இருந்து ஜூன் 28- வரை நன்மை தருவார். அதன் பின் அவர் கடகத்திற்கு வருவதால் நற்பலன் குறையும். குரு, சுக்கிரனால் வளர்ச்சி உண்டாகும். இது சிறப்பான மாதமாக அமையும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பதால் ஆற்றல் மேம்படும். கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை அகலும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் உயரும்.  வீட்டுத்தேவைகள் ஆடம்பர முறையில் நிறைவேறும். பகைவர்களின் சதி  இனி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலையும் உருவாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த நோய் தொந்தரவு மறையும். பூரண குணம் பெற்று பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில்  கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுப நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும். பெண்களால்  பொன், பொருள் சேரும். விருந்து, விழா என குடும்பத்துடன் சென்று வருவீர்கள். ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.  ஜூலை 8,9- ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். அதே நேரம் ஜூன் 24, 25ல் விருந்தினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  

ஜூலை 3, 4-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.
தொழில், வியாபாரத்தில் பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லை  மறையும். புதிய தொழில்  முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பொருளாதார வளம் சிறக்கும். வங்கி இருப்பு உயரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  ஜூன் 26, 27, 30 ஜூலை 1,2-ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜூலை 10,11- ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர்.

பணியாளர்களுக்கு கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். பணியிடத்தில் செல்வாக்கு மேலோங்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.  சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமை இனி இருக்காது.  ஜூன் 22, 23- ஆகிய நாட்கள்  சிறப்பானதாக அமையும். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.

கலைஞர்கள் கடந்த மாதம் இருந்த பின் தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி ஆதாயம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள்  தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.  மக்கள்நலப்பணிகளை அதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுத்துவர். ஜூலை 8,9- ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சி காண்பர். கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். குருபக்கபலமாக இருப்பதால்  முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விளைபொருளை அதிக விலைக்கு விற்று அமோக லாபம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குபவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பாராட்டு காண்பர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. அக்கம்பக்கத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்வர். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு விரும்பிய சலுகை விரைவில் கிடைக்கும். தொழில் புரியும் பெண்கள் வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவர். ஜூன் 15, 16, ஜூலை 12, 13, 14 ஆகிய நாட்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் கிடைக்கப்  பெறலாம். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

நல்ல நாள்- : ஜூன் 15, 16, 22, 23,24,25, 28, 29 ஜூலை 3, 4, 10,11, 12, 13, 14
கவன நாள்: ஜூன் ௧௭, ௧௮, ௧௯ ஜூலை 15, 16
அதிர்ஷ்ட எண்-: 1,9  நிறம்-: பச்சை, சிவப்பு

பரிகாரம்:
* தேய்பிறை சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு
* சனியன்று சனீஸ்வரரருக்கு எள் தீபம்
*  வெள்ளியன்று லட்சுமிக்கு நெய் தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !