திருமண தோஷம் நீங்க திருவிடந்தை வரும் பக்தர்கள் அவதி
திருவிடந்தை: திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு வழிபட, வார இறுதி நாட்களில், பக்தர்கள் குவிகின்றனர். குறுகிய பாதை, வாகன நிறுத்தம் இல்லாதது போன்ற பல சிக்கல்களால், பக்தர்கள் பரிதவிக்கின்றனர். இந்த கோவில், திருமண தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. 108 வைணவத் தலங்களில், 62வது தலமாக, இக்கோவில் சிறப்பு வாய்ந்தது. மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும், உற்சவர் நித்ய கல்யாணபெருமாள், கோமளவல்லி தாயாருடனும், கோவிலில் வீற்றுள்ளனர்.
திருமண தாமதமாவோர், துலுக்க சாமந்தி, தழை இல்லாத மலர்மாலையை, உற்சவருக்கு சாற்றி வழிபட்டால், விரைவில்திருமணமாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. கோவிலில், சுவாமிக்கு அர்ச்சித்து வழங்கப்படும் மாலையை, வீட்டில் வைத்து, திருமணமானதும், தம்பதியாக வந்து, இங்குள்ள புன்னை மரத்தில் சாற்றி, சுவாமியை வழிபடவேண்டும். மேலும், மகப்பேறு தோஷத்திற்கும் பரிகார தலம். இங்கு வழிபட, வார இறுதி நாட்களில், பக்தர்கள் குவிகின்றனர். குறுகிய பாதை , வாகன நிறுத்தம் உள்ளிட்ட சிக்கல்களால், பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.திருமண தோஷ பரிகாரத்திற்காக, இந்த கோவிலுக்கு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்;
சுவாமி சன்னதி அருகில்,ரங்கநாதர் சன்னதி மண்டபத்தில், பிரசாத, பட கடைகள் உள்ளன. பிரசாதகடை முன் நிற்பவர்கள், சுவாமி சன்னதியை சுற்றுவோருக்கு, இடையூறாக உள்ளனர். கடைகளை, வெளிப்புறம் மாற்ற வேண்டும். உள்ளூர் கடை க்காரர்கள், பக்தர்களை கூவி அழைத்து, மாலை விற்கின்றனர். அர்ச்சனை ப�ொ ருட்களைசரியாக கொடுக்காமல், மாலையை , 150 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்கின்றனர். கோவில் நிர்வாகமே, உரிமம் மூலம் மாலை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து, உள்ளே வரும் சாலை , தேவையான அகலத்தில் இல்லை . வண்டிகள், எதிரெதிரே செல்ல முடியவில்லை. வண்டி நிறுத்த இடமில்லை. சாலையிலும், கோவில் முன்பும், வண்டியை நிறுத்துவதால், பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த பிரச்னைகளை சரி செய்யவேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.